திருவாசக சேதி - ஒரே பூவின் தேன்
திருவாசகத் தேன் 1
ஒரே பூவின்
தேன்
திருவாசகம்
தேன் உணவு! தேன் மருந்து!
மனித வாழ்வில் உணவாகவும்
மருந்தாகவும் ஒருசேரப் பயன்படுவது
தேன்! வளமுடையோருக்கு தேன் உணவு.
ஏழைகளுக்குத் தேன் மருந்து. தேன், தேனீக்களால்
சேகரிக்கப் பெறுவது. தேனீக்கள் சுறுசுறுப்பானவை.
கட்டுப்பாடுடையவை; ஒழுங்குகள் உடையவை. ஒரே
தொழில் செய்பவை. பலகாத தூரம் சென்றாலும் தேன்
உள்ள மலர்களை நோக்கியே தேனீக்கள் செல்லும்.
தேனைச் சேகரிக்கும். எப்படி வாழ வேண்டும்
என்பதற்குத் தேனி ஓர் உதாரணம்.
மாணிக்கவாசகராகிய தேனீ இறைவன்
திருவடி மலர்களில் மட்டும் உட்கார்ந்து எடுத்த
தேன், திருவாசகம். திருவாசகம் என்ற தேன் ஒரே
பூவின் தேன். மாணிக்கவாசகராகிய தேனீ வேறு எந்த
மலர்களிலும் உட்கார்ந்ததில்லை. பரமசிவமே
கொற்றாளாகி மண் சுமந்து பெற்ற பரிசு,
பண் சுமந்த பாடலாகிய திருவாசகம்!
சிவபெருமானால் படி எடுக்கப்
பெற்ற நூல் இது.
*****
உசாத்துணை:
திருவாசகத் தேன் - 1
குன்றக்குடி
அடிகளார் நூல்வரிசை 8.2
8KANV
2.1.1


